Categories
Latest News

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற செயலிகளுக்கு தடையா ?

இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அரசின் விதிகளை ஏற்க தயார் என ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவதூறு செய்தியை முதலில் பரப்பும் நபரை கண்டறிந்து, அவரை பற்றிய தகவல்களை நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இவ்விதிகளை பின்பற்ற மூன்று மாத அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாட்டு விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் நேற்று ஆகும். எனினும், புதிய விதிகளை சமூக வலைதள நிறுவனங்கள், இன்னும் ஏற்றதாக தெரியவில்லை.

இதனால் இந்தியாவில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம், மத்திய அரசின் விதிகளுக்கு இணங்குவதை தாங்கள் நோக்கமாக கொண்டுள்ளதாகவும், ஆனால் அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த முக்கிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *