Categories
Latest News

அட்ரா சக்க.. அட்ரா சக்க.. இன்ஜினியரிங் மாணவர்களே.. இது உங்களுக்கான நியூஸ்

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் படிப்புக்கான செமஸ்டர் மறுதேர்வுகள் மே 25ம் தேதி முதல் தொடங்கும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் எக்ஸாம் எழுதுவதற்கு மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசு கூறியுள்ளது. இது இன்ஜினியரிங் மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அண்ணா யூனிவர்சிட்டி சார்பில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில் மதிப்பீடு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில் மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், எக்ஸாம் எழுதுவதற்கு மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இன்ஜினியரிங் செமஸ்டர் தேர்வுகள் மே 25 முதல் மீண்டும் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

பரீட்சை மற்ற பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தும் அதே வகையில் ஆன்லைன் முறையில் மூன்று மணி நேரம் நடத்தப்படும். வினாத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அவர்கள் A4 பேப்பர்களில் தேர்வை எழுதி, ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது கல்லூரிக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளில் பரீட்சைக் கட்டணம் செலுத்தாதது, முறைகேட்டில் ஈடுபடுவது, முறைகேட்டில் சந்தேகம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் பலரின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருந்தது. பல மாணவர்கள் தங்கள் முடிவுகள் தவறாக நிறுத்தப்பட்டதாக புகார்கள் எழுப்பினர். குறிப்பாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களின் தேர்வு முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/DMTG6NDF1w8JdYsk18Z2oA

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *