Categories
Latest News

அதிகாரப்பூர்வ அறிவிப்பு…தமிழகம் முழுவதும் இன்றும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியும் இயங்காது!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

ration-shop-news

அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண தொகை 4000 ரூபாய் இரண்டு தவணையாக பிரிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜூலை 24 மற்றும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் இயங்காது. எனவே இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *