Categories
Tamil Quotes

அப்துல் கலாம் தத்துவங்கள் – இன்டர்நெட் இல்லாமல் உங்கள் மொபைல் போனில் வாசியுங்கள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்.

நட்பு என்பது நண்பர்களின் நிலையறிந்து அவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுவது தான்.

பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம் ஆகும்.

உங்கள் குறிக்கோளில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால் உங்கள் இலக்கில் இம்மியும் விலகாமல் குறிவைத்து அநேக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

நமது தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

வாழ்வில் உயர்ந்தவர்கள் அனைவரும் நேர்மறை எண்ணம் கொண்டவர்களே.

சாதிக்கும் வேட்கை நம் ஓவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்டே தீரவேண்டும். உண்டு உறங்கிக் காலத்தை வீணாகக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை.

உண்மையான அதிஷ்டம் என்பது என்ன தெரியுமா? அது நமது உழைப்பின் அடிப்படையில் வருவதாகும். நம்முடைய புறத்தேயுள்ள சூழ்நிலைகளின் காரணமாக வருவதில்லை.

நமது நாடு ஏழ்மையான நாடு அல்ல. நமது எண்ணங்கள் அனைத்தும் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இது போன்ற தத்துவங்களை பெற:

தினம் ஒரு தத்துவங்களை பெற இங்கே கிளிக் பண்ணுங்க -> https://play.google.com/store/apps/details?id=com.appglits.abdulkalamsirquotes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *