நம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்கள்.. எனவே மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர். இந்த நேரத்தில் மிகப்பெரிய பொழுதுபோக்காக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளது.
இன்றைக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவி ஒவ்வொருவரையும் அச்சுறுத்தி வரும் இவ்வேளையில் மீம்ஸ் கிரியேட்டர்களால் சவப்பெட்டி காஃபின் நடனம் பிரபலமாகி வருகிறது.

அதுவும் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பிரபலமாகியுள்ள இந்த நடனம் பற்றிய சில தகவல்கள் இதோ…
கானா நாட்டில் வேலைவாய்ப்பு மிக கணிசமாக குறைந்த நேரத்தில் 100-க்கும் அதிகமான பேருக்கு வேலையை அளித்துள்ளது, ஐடோ எனப்படும் இந்த காஃபின் நடனம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்து வரும் இந்நிலையில், அதனை தமாஷாக புரிய வைக்கவே இந்த வீடியோ உலாவியது.
ஆனால் நிறைய பேர் இதை சினிமா என்று நினைத்தனர். ஆனால் இது உண்மையிலேயே சவப்பெட்டி நடனக்காரர்கள்தான்.
இறுதிச்சடங்கில் நடனம் ஆடுவதற்கென குழுக்கள் நம் இடத்தில உள்ளது போல, கானா நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் ஐடோ என்பவரின் தலைமையிலான குழு நடனம் தான் இந்த காஃபின் நடனம்.
இது முழுக்க முழுக்க இறந்த நபர்களின் குடும்பத்தினரின் முழு விருப்பத்தின் பேரில்தான் நடனமாடுகிறோம் என்று கூறியுள்ளது இந்த நடனக்குழு.
நடனத்தை பார்க்க:
லிங்க் 1 -> https://www.youtube.com/watch?v=FEIFyz8R9Xs
லிங்க் 2 -> https://www.youtube.com/watch?v=y_lYoENIffI
லிங்க் 3 -> https://www.youtube.com/watch?v=H-ARhyBMNEM