Categories
Current Affairs

இன்று அறிவிப்புகள் வெளியீடு! தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு & புதிய கட்டுப்பாடுகள் அமல்?

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று (ஜன.4) ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இது குறித்த அறிவிப்புகள் இன்று (ஜன.5) வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

cm-stalin-news-tn

மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மத வழிபாட்டு தளங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையுள்ள வார இறுதி நாட்களில் பக்தர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரவும் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்ததாக கடைகள் செயல்படும் நேரத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை முதல்வர் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட மேலே குறிப்பிடப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான அறிவிப்பு இன்று (ஜன.5) வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *