Categories
Latest News

உங்கள் சந்தேகத்துக்கு பதில்! ரேஷன் கார்டில் இல்லத்தரசியின் போட்டோ இருந்தால் தான் ரூ.1000 கிடைக்குமா ?

தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் எந்த வித ரேஷன் அட்டைதார்களுக்கு பொருந்தும் என்பது தொடர்பாக பொதுமக்கள் இடையே குழப்பங்கள் நீடிக்கிறது.

ration-shop-news

ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவியின் படம் இருந்தால் மட்டுமே, குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற முடியும் என பரவும் தகவலால், ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அடையாளத்துக்கு மட்டும் பயன்படுத்தும் அட்டை உள்ளிட்ட 5 வகை அட்டைகள் உள்ளன.

இதனால் இந்த திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்து பல்வேறு வித அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 5 வெவ்வேறு அட்டைகளில் அரிசி வழங்கப்படும் அட்டைகளான PHH, PHH – AAY மற்றும் NPHH ஆகிய அட்டைதாரர்களுக்கு மட்டுமே மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மற்ற இரு அட்டைகளான NPHH – S மற்றும் NPHH – NC ஆகியவற்றிற்கு 1000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரேஷன் கடைகள் மூலம் மாத உதவித்தொகை குறித்து தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதன் உண்மை தன்மை தெரியாமல் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் ரூ.1000 உதவித்தொகை பெற ரேஷன் கார்டு அட்டையில் இல்லத்தரசியின் புகைப்படம் இருக்க வேண்டும் என்ற செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு அவசியமில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *