நம்ம வீட்டில ஓவன் இல்லன்னா என்ன! வெறும் குக்கரை வச்சே பீட்ஸா பண்ணலாம். அட ஆமாங்க. அதற்கான வீடியோ இதோ இருக்கு. பார்த்து நீங்களும் வீட்ல ட்ரை பண்ணுங்க.
செய்முறை:
மாவு கலவை:
முதலில் சூடான நீர், சுகர், ஈஸ்ட் ஆகியவற்றை சேர்த்து ஒரு கப்பில் நன்றாக கலக்க வேண்டும். அதை ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன்பிறகு இந்த கலவை நன்றாக கலங்கியதும் பொங்கி வரும்.
அடுத்து இந்த கலவையை மைதா மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். நல்ல மிருதுவாக வர, மாவை பிய்த்து நன்றாக பிசைய வேண்டும். இப்படி பண்ணும்போது இறுதியில் மாவு கையில் ஒட்டாம அழகா வரும்.
அடுத்து ஒரு துணி வைத்து இந்த மாவை நன்றாக மூடி ஒருமணி நேரம் வைக்க வேண்டும்.
அடுத்து பீஸாக்கு தேவையான தக்காளி பியூரி (tomato puree) பண்ண வேண்டும்.
கெச்சப்:
தக்காளி, காய்ந்த மிளகாய், துண்டு வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின் இந்த கலவையை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் பீட்ஸா கெச்சப்.
பீட்ஸா:
காலிப்ளவர், கேப்ஸிகம், கேரட், வெங்காயம் ஆகியவற்றை கட் பண்ணி எடுத்துக்கோங்க.

நாம் ஏற்கனவே செய்த tomato puree உடன் red chilli sauce ஒரு ஸ்பூன் சேர்த்து அடுப்பில் வைத்து வதக்கி கொள்ளுங்கள்.
குக்கரை அடுப்பில் வைத்து லைட்டா சூடாக்கிவிட்டு வீடியோவில் உள்ளபடி உப்பு சேர்த்து கொள்ளுங்கள். அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து கொள்ளுங்கள். மாவை சப்பாத்திக்கு செய்வதுபோல் நன்றாக தேய்த்துக்கொள்ளுங்கள். அடுத்து மாவில் fork spoon வைத்து சில துளைகள் இட்டுக்கொள்ளுங்கள். ஏற்கனவே ரெடி பண்ணுன sauce மாவின்மேல் தடவி கொள்ளுங்கள். இனி cheese ஐ அதன்மேல் பரப்பி வையுங்கள். அதன் மேல் அடுத்து காலிப்ளவர், கேரட், வெங்காயம், கேப்ஸிகம் வைத்துவிட்டு அதன்பின் மேலும் cheese ஐ வையுங்கள்.
இதை அப்படியே குக்கரில் வைத்து மூடிவிடவும். விசில் செட் பண்ணாமல் மூடி வைக்கவும். ஒரு 45 நிமிடம் அடுப்பில் வைக்கவும். அவ்ளோதான் சூப்பரான பீட்ஸா ரெடி ஆகியாச்சு.
இது போன்ற சூப்பரான சமையல் வீடியோக்களுக்கு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் பண்ண லிங்க் இதோ: https://www.youtube.com/channel/UCC2NF_MDN-gjjjMiUJvnkww
இந்த சமையல் பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.