Categories
Tamil Nadu Government Jobs

குரூப் 1 எக்ஸாம் எழுத போறீங்களா!! இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு

குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

breaking-news-2-1

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜனவரி 2020-ல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் ஐகோர்ட்டு உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர்கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 2020 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முடிவிலிருந்து 1 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *