Categories
Govt Jobs

கைப்புள்ள அலெர்ட்டா இருந்துக்கடா! இந்த ஏரியா எல்லாம் இன்று முதல் 29 ஆம் தேதி வரை மழை வெளுத்து வாங்க போகுது..

மேலடுக்கு சுழற்‌சியின்‌ காரணமாக நவம்பர் 29 ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (3.1 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.

rain-rain-2-1

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மமை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

25.11.2021 ஆம் தேதி: ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, அரியலூர்‌, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌
கூடிய கன மழையும்‌ ஏனைய கடலோர மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.11.2021 ஆம் தேதி: கன்யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌ பெய்யக்கூடும்‌.

27.11.2021 ஆம் தேதி: காஞ்சிபுரம்‌, இருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர்‌, விழுப்புரம்‌, சேலம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

28.11.2021 ஆம் தேதி: திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கோயம்புத்தூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

29.11.2021 ஆம் தேதி: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடண்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *