Categories
Latest News

கொரோனாவுக்கு எதிர்ப்பு மருந்தை இந்தியா கண்டுபிடித்தது.. டிஆர்டிஓ விஞ்ஞானி டில்லி பாபு தகவல்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கொரோனா எதிர்ப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இது இந்தியாவுக்கு ஒரு வரலாற்று தருணம் என்று சொன்னால் அது மிகையாகாது. கொரோனா இரண்டாவது அலை அதிக வலிமையுடன் வந்துள்ளது என்பதை நாம் மிகத் தெளிவாக அறிவோம். இந்த நிலையில்தான் 2 டிஜி மருந்து வருகிறது.

டிஆர்டிஓ மற்றும் முக்கிய ஆய்வு நிறுவனங்கள் கண்ட றிந்துள்ள 2 ‍- டியாக்ஸி – டி – குளுக்கோஸ் 2 டிஜி (2-deoxy-D-glucose 2‍ DG மருந்தானது ஆபத்தான நிலையில் உள்ள கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்து ஆகும். இதுவரை கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு ம‌ருத்துவர்கள் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

இந்த சூழலில், டிஆர்டிஓ நிறுவனமும், டாக்டர் ரெட்டி பரிசோதனை மையமும் இணைந்து கடந்த ஓராண்டாக ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த மருந்தை உருவாக்கியுள்ளன. கோவிட் பல கட்டங்களில் நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர் அவசர காலங்களில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு வெற்றிகரமாக கண்டறியப்பட்டது.

2ம் கட்ட சோதனையின் போது கரோனா பாதித்து ஆபத்தான நிலையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 110 நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அதில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்ததால், மூன்றாம் கட்டமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 220 நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. அப்போதும் நோயாளிகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது.

இதன் அடிப்படையில், இந்திய மருந்து பொது கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் (DCGI) இந்த மருந்தை, மிதமான மற்றும் தீவிரமான பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மருந்தாக பயன்படுத்த அனுமதித்துள்ளார்.

குளுக்கோஸ் அடிப்படை யிலான இம்மருந்தை நீரில் கலந்து பருகியதும் நோயாளியின் உடலில் கொரோனா வைரஸ் பாதித்த செல்லில் படிந்து, அந்த வைரஸ் கிருமி மேலும் பெருகாமல் தடுக்கிறது. இதனால் மருந்தை உட்கொள்வதால் நோயாளிகள் ஏறக்குறைய 3 நாட்களுக்கு முன்பாகவே குணமடைகிறார்கள். அவர்களின் உடலில் ஆக்ஜிஜனும் அதிகரிக்கிறது.

இந்த மருந்தானது, ஊசி மூலமாக செலுத்தாமல் வாய் வழியாக உட்கொள்ள முடியும். மருத்துவத் துறை சாராதவர்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால், நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு சென்று, கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு எளிதாக பயன்படுத்த முடியும்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/DMTG6NDF1w8JdYsk18Z2oA

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *