Categories
Latest News

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டிஆர்டிஓவின் 2டிஜி பவுடர் வடிவ மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கொரோனா எதிர்ப்பு மருந்தினை அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியா அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் டிஆர்டிஓ தயாரித்த பவுடர் வடிவிலான கொரோனா எதிர்ப்பு மருந்து 2 டிஜியின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை அதிக வலிமையுடன் வந்துள்ளது என்பதை நாம் மிகத் தெளிவாக அறிவோம். இந்த நிலையில்தான் 2 டிஜி மருந்து வருகிறது. குளுக்கோஸ் அடிப்படை யிலான இம்மருந்தை நீரில் கலந்து பருகியதும் நோயாளியின் உடலில் கொரோனா வைரஸ் பாதித்த செல்லில் படிந்து, அந்த வைரஸ் கிருமி மேலும் பெருகாமல் தடுக்கிறது. இதனால் மருந்தை உட்கொள்வதால் நோயாளிகள் ஏறக்குறைய 3 நாட்களுக்கு முன்பாகவே குணமடைகிறார்கள். அவர்களின் உடலில் ஆக்ஜிஜனும் அதிகரிக்கிறது.

டிஆர்டிஓ தயாரித்த வாய்வழியாக உட்கொள்ளும் பவுடர் வடிவ கோவிட் -19 சிகிச்சை மருந்து 2 டிஜியின் விலை ரூபாய் 990 என டாக்டர் ரெட்டியின் ஆய்வக நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த மருந்து நிறுவனம் அரசு மருத்துவமனைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு தள்ளுபடி விலையில் மருந்து வழங்கும் எனவும் தெரிவித்திருக்கிறது. வியாழக்கிழமை முதல் இம்மருந்தின் 10,000 பாக்கெட்டுகள் மருந்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மருந்தானது, ஊசி மூலமாக செலுத்தாமல் வாய் வழியாக உட்கொள்ள முடியும். மருத்துவத் துறை சாராதவர்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பதால், நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு சென்று, கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு எளிதாக பயன்படுத்த முடியும்.

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *