கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த நாள் ஒன்றுக்கு உள்ள கட்டணம்

coronavirus-treatment-cost-in-india

சீனாவில் ஆரம்பித்து உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

பிற மாவட்டங்கள் மெல்ல பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருபவர்களால் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக அதிகமாக உள்ளது.

ஆரம்ப காலத்தில் பாதிப்பின் அளவு குறைவாக இருந்தபோது கொரோனாவுக்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதியளிக்கப்பட்டதுடன் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடர்பாக நம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை கொண்டு வந்துள்ளது.

தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்யும்போது அதிகளவிலான கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. தற்போது சிகிச்சை அளிப்பதிலும் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக கொரோனா சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம். இதை மீறும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது லேசான அறிகுறிகள் உள்ளவர்களில் கிரேடு ஏ 1 மற்றும் ஏ 2 பிரிவில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாயும், ஏ4, ஏ5 பிரிவினருக்கு 5000 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் நாள் ஒன்றுக்கு 15000 வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *