சாப்பாட்டை நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா

soru-eppadi-sapida-vendum

வாட்ஸப்பில் அதிகம் பகிரப்பட்டது.. சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் உடல் நலத்துக்கான முக்கியம் அடங்கியுள்ளது.

தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.  கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.

அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது.

மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

மேலும் பின்வருவனவற்றை கடைபிடித்தால் ரொம்ப நல்லது:

4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும்.  கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.  ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.  அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,  வாழ்நாளைக் குறைக்கும்.

பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடவே கூடாது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த திட உணவு கூடாது.

காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.

நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *