Categories
Latest News

சூப்பர் ஐடியா.. ரயில் நிலையத்தில் வெண்ட்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகளுடன் 31 ரயில் பெட்டிகள் தயார்

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கிட்டத்தட்ட முழுதும் நிரம்பி விட்ட சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை அனுமதிப்பதற்காக ரயில் நிலையத்தில் 31 ரயில் பெட்டிகள் தயாராக உள்ளன.

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டு உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சமயநல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 31 கொரோனா ரெயில் பெட்டிகள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளாக மாற்றப்படுகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியபோது வெண்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களுடன் இவை தயாரிக்கப்பட்டன.

கொரோனா ரெயில் பெட்டிகளில் ஒரு ஜன்னல் மூடப்பட்டு, மற்றொரு ஜன்னல் திறக்கப்பட்டு உள்ளது. இவற்றில் மருத்துவ உபகரணங்கள் பொருத்த வசதியாக, 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் உள்ளன.

ஒரு பெட்டிக்கு 4 கழிவறைகள், 2 குளியல் அறைகள் உள்ளன. ஒவ்வொரு குளியல் அறையிலும் தலா ஹேண்ட் ‌ஷவர், வாளி, கோப்பை ஆகியவை வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 4 பாட்டில்கள் வைக்கும் வகையில் ஹோல்டர்கள் உள்ளன.

தற்போது மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்று உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றை மீண்டும் மதுரை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட சுகாதார அதிகாரி ஊடகங்களுக்கு கூறும்போது, மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்தாலும், நோய் தொற்று குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இதுதவிர வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் கொரோனா ரெயில் பெட்டிகள் மீண்டும் மருத்துவ சேவையில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். எனவே அரசு சொல்வதை கேட்டு வீட்டில் தனித்திருப்போம்.. கொரோனாவை வெல்வோம்..

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *