Categories
Latest News

செம்ம..வேளாண்துறையின் அதிரடி.. நாளை முதல் உங்கள் வீடு தேடி வந்து காய்கறிகள் விற்பனை

கொரோனா வைரசின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதில் திங்கட்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உளளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்றும், இன்றும் மட்டும் வெளியூர் பயணத்திற்கு தனியார், அரசுப்பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

breaking-news-2

ஒரு வாரத்திற்கு முழு முடக்கம் காரணமாக காய்கறி, மளிகை கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதாவது, மளிகை கடைகள் ஒரு வாரத்திற்கு அடைக்கப்பட்டால் உணவகங்கள் செயல்படுவது கஷ்டம். ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வைத்தால் காய்கறிகள் அழுகி வீணாகும் நிலை ஏற்படும். காய்கறி விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் குறைந்த நேரமாவது காய்கறி, மளிகை கடைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசானது முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதன்படி நாளை முதல் தமிழகத்தில் தமிழகத்தில் 4380 வாகனங்களில் வேளாண்துறை சார்பில் வீடுகள் தோறும் சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட உள்ளது. வேளாண்துறையின் முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு;

சென்னைக்கு ஒரு நாளைக்கு தேவையான 1160 மெட்ரிக் டன் காய்கறிகள் 1610 வாகனங்களில் விற்பனை

தமிழகத்தின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு நாள் தேவையான 2228 மெட்ரிக் டன் காய்கறிகள் 2770 வாகனங்களில் விற்பனை

காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகாமையில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்

காய்கறிகள் மற்றும் பழங்கள் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044-22253884 என்ற தொலைபேசி எண் அறிவிப்பு

உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விற்பனை நடைபெறும்

தினமும் காலை 7மணி முதல் மதியம் 1மணி வரை வாகனங்கள் மூலம் மக்களின் வசிப்பிடங்களில் காய்கறி விற்பனை நடைபெறும்

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *