Categories
Latest News

ஜூன் மாத ரேஷன் பொருட்களை பெற வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம்

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 2021 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மளிகைக் கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில், ஆன்லைன் அல்லது மொபைல் வாயிலாக மளிகைப் பொருட்களை ஆர்டர் பெற்று அவற்றை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல வாகனங்கள், தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்களுடன் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ண இங்கே 👉 https://bit.ly/2RUkfV0 கிளிக் பண்ணுங்க

மேலும் காலை 8 முதல் நண்பகல் 12 வரை ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில், முந்தைய மாதங்களை போன்று ஜுன் மாதத்திலும் டோக்கன் முறையிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி நாள் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கடையில் 200 பேருக்கு மட்டும் சுழற்சி அடிப்படையில் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இன்று முதல் வருகின்ற 4-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ரேஷன் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகிக்க உள்ளனர்.

இந்நிலையில், நிர்வாக காரணத்தால் துவரம் பருப்பு மட்டும் 7-ம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி ரேஷன் பொருட்களை வாங்குவற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் பண்ண இங்கே 👉 https://bit.ly/2RUkfV0 கிளிக் பண்ணுங்க

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *