Categories
Latest News

ஜூன் 14 முதல் அண்ணா பல்கலை மறுதேர்வு தொடங்க கால அட்டவணை வெளியீடு!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு 2017 ஒழுங்குமுறைப்படி ஜூன் 14 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துள்ளதால் இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்துவது கஷ்டம் என்பதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், 2017 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 21ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை எழுதாமலும், கட்டணம் செலுத்தாமலும் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு UG தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 10 வரையிலும், 2017 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி ஜூலை வரை நடைபெறும்.

2013 ஆம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. மற்ற மாணவர்களுக்கு 2013 இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 30 வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த முக்கிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *