ஏற்கனவே கொரோனா நோயின் தாக்கம் தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது பெற்றோர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு வர முடியாது என்பதால் வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கும்படி அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில் 10ம் வகுப்பு தேர்வு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் கூறினர்.
அப்படி அரசு தலைமை வழக்கறிஞர் வராவிடில் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும். இன்று முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் சந்திப்பு குறித்த நிலவரங்களை உடனே தெரிவிக்கவும் கூறியுள்ளனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஜூன் 15-ல் பொதுத்தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது. கொரோனா நோயின் தொற்று பரவல் குறைந்த பின்பு தேர்வை நடத்தலாம். ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து அரசு தெரிவிக்கவேண்டும். 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த செய்திகள் நம் மக்களிடையே மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எதுவென்றாலும் அரசு சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இந்த பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.