டிக் டாக், ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா

tiktok-banned

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் டிக் டாக், ஷேர்இட் (shareit) செயலிகள் உட்பட 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.

நாளுக்குநாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க, சீனாவுடனா மோதலால் இந்தியாவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் ஆன்லைன் உலகில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் டிக் டாக் உட்பட பல செயலிகள் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

மேலும் இந்த செயலிகளால் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கடந்த காலங்களில் புகார்கள் குவிந்தன. இதனைத்தொடர்ந்து டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பின்வரும் 59 செயலிகள் தடை செய்யப்படுகின்றன. டிக் டாக், வி சாட், ஹலோ மட்டுமின்றி, ஷேர்இட், யூசி பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், லைக், எம்.ஐ. கம்யூனிட்டி, நியூஸ்டாக், பியூட்ரி பிளஸ், ஜெண்டர், பிகோ லைவ், மெயில் மாஸ்டர், வி சிங், விவா வீடியோ, விகோ வீடியோ, கேம் ஸ்கேனர், விமேட்.

இது இளைய சமுகத்தினரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை என்னவென்றால்:-

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனர்களின் தகவல்களை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளன.

இவ்வாறு திருடப்படும் தகவல்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சம் விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *