தடைகளை தகர்க்க தன்னம்பிக்கை தத்துவங்கள்

motivation-tamil

குழந்தையாய் பிறந்து, வளர்ந்து சிறுவனாகி, வாலிபனாய் மகிழும் நாம், வயது முதிர்ந்து இறப்பதை விரும்புவதில்லை! புத்தர்

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்……….. கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை! விவேகானந்தர்

உண்பதற்காக வாழாதே! உயிர் வாழ்வதற்காக உண்! சாக்ரடீஸ்

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்!! ஜார்ஜ் பெர்னாட் ஷா

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே! என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்! செய்வதை விரும்பிச் செய்! செய்வதை நம்பிக்கையோடு செய்!! வில் ரோஜர்ஸ்

அன்றாட வாழ்வின் சாதாரண விஷயங்களையும், அசாதாரண முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்! ஜார்ஜ் வாஷிங்க்டன் கர்வர்

என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன் – காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல 1000 தோல்விகளை பார்த்தவன் !!! நடிகர் அஜித் குமார்

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை! ஆப்ரகாம் லிங்கன்

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும். வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல! வின்ஸ்டன் சர்ச்சில்

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன! வெறும் வலிமையால் மட்டும் அல்ல! சாமுவேல் ஜான்சன்

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது….. ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்! மாவீரன் அலெக்சாண்டர்

உலகத்தில் அநீதி கண்டு, கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால், நாம் இருவரும் தோழர்கள்! சே குவேரா

விதைத்தவன் உறங்கலாம்…. ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை!! பிடல் காஸ்ட்ரோ

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே! அடால்ப் ஹிட்லர்

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது. யாரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது… காந்தி ஜி

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்!! நெல்சன் மண்டேலா

கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை! அன்னை தெரசா

இது போன்ற தத்துவங்களை பெற:

தினம் ஒரு தத்துவங்களை பெற இங்கே கிளிக் பண்ணுங்க -> https://play.google.com/store/apps/details?id=com.appglits.leadersquotestamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *