Categories
Latest News

தமிழகத்தில் எதெற்கெல்லாம் இ- பதிவு தேவை! எதெற்கெல்லாம் இ-பாஸ் தேவை

தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் ஜூன் 28 வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 3ல் இடம் பெற்றிருக்கும் 4 மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வகை 2 ல் இடம் பெற்றிருக்கும் 23 மாவட்டங்களில் வாடகை டாக்சிகளில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் வகை 2 மற்றும் 3ல் இடம்பெற்றிருக்கும் 27 மாவட்டங்களில் திருமண நிகழ்வுகளுக்காக வேறு மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது திருமண நிகழ்வுகளுக்கு அனைவராலும் இ-பதிவு விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணமகன், மணமகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரால் மட்டுமே இ-பதிவு பதிவு செய்ய முடியும் என்றும் ஒரு நிகழ்வுக்கு ஒரே ஒரு இ-பாஸ் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு விண்ணப்பம் மேற்கொள்ள அரசின் அதிகாரபூர்வ தளமான https://eregister.tnega.org/#/user/pass என்ற தளம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடு காலி செய்து பொருட்களை சரக்கு வாகனம் மூலம் எடுத்து செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்களுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *