Categories
Latest News

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – எவை எவை இயங்கும் இயங்காது முழு விவரம்!!

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அமல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் கொடூர தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இறுதி ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. வார இறுதி நாளான ஞாயிறு கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருந்த போதிலும் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதனால் அரசு மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் படி முழு ஊரடங்கு நேரத்தில் மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான அரசு, தனியார் போக்குவரத்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும்.

வேளாண்மை உற்பத்திக்கு தேவையான கடைகள் நண்பகல் 12 மணி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் வணிகம், உணவு பொருள் கொண்டு செல்லும் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்களும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய அறிவிப்பாக நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/DMTG6NDF1w8JdYsk18Z2oA

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *