Categories
Latest News

தமிழக அரசின் எச்சரிக்கை! 5 மாவட்டங்களுக்கு அலர்ட்!

தமிழகம் மற்றும் கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. எனவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

rain-rain-2

இதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. இதனால் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *