Categories
Govt Exam Info

தமிழ் வழியில் பயின்ற நண்பர்களே..TNPSC தேர்வாணையத்தின் மிக முக்கிய அறிவிப்பு!

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ் வழியில் பயின்று குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. TNPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான பல்வேறு பதவிகளூரிய முதல்நிலை பணியிட தேர்வுகள் ஆனது கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்டது.

breaking-news

அதில் தேர்வு பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தாங்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என சான்றிதழ் பதிவேற்றதின் போது தெரிவித்தவர்கள், தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பெறுவதற்குரிய படிவங்களை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்ற தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

புதிய வடிவில் உள்ள இப்படிவங்களை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையத்தின் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான முழு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையதள லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் இது தொடர்பான கூடுதல் விளக்கம் பெற தேர்வாணையத்தின் 1800 419 0958 எனும் கட்டணமில்லா (Toll Free Number) தொலைபேசி எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்: https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/38_2021_PRESS%20RELEASE.pdf

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *