நட்புன்னா என்னன்னு தெரியுமா.. இக்கவிதைகள் அனைத்து தளபதிகளுக்கும் சமர்ப்பணம்

friendship-quotes-tamil

நட்பின் அருமை பெருமைகளை உணர்த்தும் சில வரி கவிதைகளை இந்த பக்கத்தில் இணைத்துள்ளோம். உங்கள் தளபதிக்கு கண்டிப்பா ஷேர் பண்ணுங்க…

புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால் நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.

காற்றுக்கு என் மீது கோபம் காரணம் கேட்டேன்! காற்று சொன்னது, சுவாசிப்பது என்னை, நேசிப்பது உன் நண்பர்களையா? என்று

உதவியை செய்து விட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறது நட்பு!!

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை, புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை,..

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல…மறு துளி வராமல் தடுப்பது தான் நட்பு!!

காற்றை போல சுவாசிக்கும் நம் நட்பின், சுவாசத்தை சுவாசிக்க மறவாதே தோழா! இன்று இல்லை, என்றும்..!!

நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல, நம் தலை எழுத்து முடியும் வரை..

தோல்விகள் கூட இனிக்கும், வெற்றி பெற்றது உன் நண்பனாய் இருந்தால்…..

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதல், தொட நினைக்காமலே தொட்டு பேசுவது நட்பு!.

பிரிந்து விட்டால் இறந்து விடுவேன்…இது காதல்….!!! இறந்து விட்டால் மட்டும் பிரிந்து விடுவேன்…இது நட்பு…!!

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்…ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்..!

நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் சிறந்த கருவிதான் நட்பு…

நண்பர்கள் பிரிவது இல்லை, காரணம்…பிரிவதற்கு அவர்கள் உறவுகள் அல்ல, உணர்வுகள்!!

முள்ளில் வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை.. அன்பில் வளரும் நட்பை யாரும் மறப்பதில்லை…

விடாமல் பேசுவது காதல், விட்டுக்கொடுக்காமல் பேசுவது நட்பு….

நட்புக்கு வயது அவசியமில்லை… பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் உன்னதமான உறவே நட்பு…!!

உப்பு இருந்தால் தானே உணவு சுவைக்கும்.. நட்பு இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும்

அருகில் இருந்து பார்த்து பேசும் உறவை விட, தொலைவில் இருந்து மனதில் நினைத்து பார்க்கும் நட்பே சிறந்தது…

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும். மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே என் நண்பனாக வேண்டும்….

நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல!! நம் தலை எழுத்து முடியும் வரை….

தினம் ஒரு முறை தோல்வி பெற விரும்புகிறேன்…! என் தோழன் என் தோளில் தட்டி ஆறுதல் சொல்வதை எதிர்பார்த்து…!!

விட்டு பிடிப்பது நட்பல்ல… விட்டு கொடுப்பது நட்பு…!விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல.. கடைசிவரை  விட்டு விலகாமல் இருப்பதுதான் உண்மையான நட்பு..!!

இந்த கவிதைகள் பிடிச்சிருந்தா, இப்போதே கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்க தளபதிக்கு கண்டிப்பா ஷேர் பண்ணுங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *