paati-vaithiyam-tamil

வணக்கம் தமிழ் நண்பர்களே. இந்த பக்கத்தில் நம் அனைவருக்கும் தேவைப்படும் மற்றும் மிக முக்கியமான பாட்டி வைத்திய குறிப்புகளை காண உள்ளோம்.

மாமரத்து பிசினை வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.

வயிற்றில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் புதினா துவையல் ரொம்ப நல்லது.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும்.

குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி நீங்கும்.

தீக்காயம் பட்ட இடத்தில வாழைபட்டை சாறு பிழிந்து விடலாம்.

கோவைப்பழம் தினமும் ஓன்று சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து விடும்.

அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு பிறகு கழுவிவர முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மாறி பளபளக்கும்.

வாழை பழத்துடன், ஏலக்காயை பொடி செய்து சாப்பிட்டால் பெரும்பாடு என்ற இரத்த போக்கு குணமாகும்.

தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் குணமாகும். முக பொலிவு உண்டாகும்.

அருகம் புல்லை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணம் தணியும்.

உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் உணவில் வெங்காயத்தை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

வயிற்று பூச்சி உள்ளவர்கள் மோருடன் சிறிதளவு வேப்பிலை சாறை கலந்து குடித்தால் வயிற்று பூச்சிகள் வராது.

விக்கல் குணமாக நெல்லிக்காயை இடித்து அதின் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டவும்.

அதிகமாக காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கல் என்ற பயமே இல்லை.

கல்லடைப்பு உள்ளவர்கள் தினமும் தென்னங்குருத்தை சாப்பிட்டு வந்தால் கல்லடைப்பு குணமாகும்.

கர்பிணி பெண்கள் புளிக்காத தென்னங்கள்ளு குடித்து வந்தால் அழகான குழந்தை பிறக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தேனையும் நெல்லிக்காய் பொடியையும் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

பிரண்டையை வதக்கி அதை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

தொண்டைப்புண் உள்ளவர்கள் தினமும் சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர்  குடித்தால் தொண்டைப்புண் வராது.

வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும்.

புடலங்காய் பிஞ்சியை பச்சடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

வாந்தி ஏற்பட்டால் எலுமிச்சை சாறில் ஊறிய ஜீரகத்தை நன்கு உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் வாந்தி வராது.

இரும்பு சத்து குறைபாட்டில் ஏற்படும் சோகையை சரிசெய்ய சோயாபீன்ஸ் சாப்பிட்டால் குணமாகும்.

காய்ந்த மல்லிகை பூவை பொடி செய்து, அதை தேநீர் போல குடித்து வந்தால் சிறுநீரக கல் நீங்கும்.

முட்டைகோஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி வருவதை தடுக்கலாம்.

அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தி உச்சந்தலையில் கால் மணி நேரம் ஊறவிட்டு குளித்தால், உச்சந்தலைக் குளிர்ந்து உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

மாதுளம் பழ தோலை அரைத்து அதில் சிறிதளவு தயிர் கலந்து குடித்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

கறந்த பாலில் சிறிதளவு மஞ்சள் துளை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

உலர்ந்த திராட்சைப்பழத்தை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் சரியாவதுடன் நாவறட்சி மயக்கம் போன்றவை நீங்கும்.

லேசான காய்ச்சல் உள்ளவர்கள் முருங்கைப் பிஞ்சை சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.

மூட்டு வலி உள்ளவர்கள் சுக்கை நீர் விட்டு நன்கு அரைத்து அதை மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குணமாகும்.

குடல் வால் சுழற்சி என்ற “அப்பண்டிசைட்டிஸ் ” உள்ளவர்கள் பலா பழம் சாப்பிடக்கூடாது.

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இதய பலவீனம் படபடப்பு போன்றவை ஏற்படாது.

சளி தொல்லை உள்ளவர்கள் துளசி மற்றும் இஞ்சி கலந்து குடித்தால் சளி குணமாகும்.

உடல் பெலவீனம் நீங்க வாரத்திற்கு ஒரு முறை பப்பாளி பழம் சாப்பிட்டு வரவும்.

வாத பிரச்சனைகளுக்கு கழுதை பால் நல்லது.

ஆப்பிள் பழத்தை துண்டுகளாக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம்பெறும். முகமும் தேகமும் அழகாகும்.

கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைய உருளைக் கிழங்குடன் பாதாம் பருப்பை அரைத்து பூசினால் கருவளையம் மறையும்.

திராட்சைப்பழம் சாப்பிடுவதால் உடல்வறட்சி பித்தம் போன்றவை நீங்கும்.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் தேவை இல்லாத அதிகப்படியான கொழுப்பை குறைக்கலாம்.

பொன்னாங்கன்னி இலையை சூப் செய்து குடித்தால் உடல் வலிமை பெறும்.

உடலில்  தீ காயம் பட்டால் பெருங்காயத்தை உரசி பாதிக்கப்பட்ட இடத்தில தடவினால் எரிச்சலும் கொப்பளமும் ஏற்படாது.

அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் உள்ளவர்கள் கருப்புத்திராட்சை பழச்சாற்றை தினமும் 200மி.லி இரண்டு வேளைகள் குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புசத்துக்கள் குறையும்.

சளி தொல்லை உள்ளவர்கள் மிளகாயுடன் பத்து துளசி இலையை சேர்த்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்த்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

மணத்தக்காளியை பச்சையாக தயிரில் போட்டு சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

குடல்புண் உள்ளவர்கள் திராட்சைபழம் சாப்பிட்டால் குடல்புண் சரியாகிவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பொன்னாங்கன்னி கீரையுடன் வெள்ளைப் பூண்டை கலந்து வெள்ளைத் துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் கண்வலி குணமாகும்.

தாய் பால் அதிகம் சுரக்க முருங்கை கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வரவும்.

காக்காய்வலிப்பு உள்ளவர்கள் தினமும் திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோயின் தன்மை குறையலாம்.

மூலம் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து வாரம் இருமுறை கருணை கிழங்கு சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனையிலிரூந்து விடுபடலாம்.

மூக்கில் புண் ஏற்பட்டால் மஞ்சளை சுட்டு கரியாக்கி அதை வேப்ப எண்ணெயில் கலந்து மூக்கில் உள்ள புண் மீது தடவினால் குணமாகிவிடும்.

கால் எரிச்சல் உள்ளவர்கள் சுரைக்காயின் சதைப் பகுதியை பிசைந்து கட்டினால் கால் எரிச்சல் குணமாகும்.

அறுகீரையை நெயில் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், டைபாய்டு போன்றவை குணமாகும்.

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெந்தயக்கீரையை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இருமல் பிரச்சனை உள்ளவர்கள் பசும்பாலில் மஞ்சள்பொடி மற்றும் மிளகுப்பொடி போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

மணத்தக்காளி கீரையை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் சீக்கிரத்தில் குணமாகும்.

திராட்சை பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு கட்டுப்படும்.

மாங்காய் தோலில் இரும்பு சத்து உள்ளது. இது ரத்த சோகைக்கு மருந்தாக பயன்படுகிறது.

கேரட், திராட்சை, ஆரஞ்சு ஜுஸ் இதில் ஏதாவது ஒன்றை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் குறையும்.

சுக பிரசவம் ஆகுவதற்கு ஆடுதின்னாபாளை வேர் பொடியை 2 கிராம், எடுத்து வெந்நீரில் குடித்து வர பிரசவ வேதனை குறைந்து, சுகப்பிரசவம் ஆகும்.

உடல் எடை அதிகரிக்க பூசணிக்காயை சமைத்து தொடர்ந்து 2 அல்லது 3 மாதம் சாப்பிட்டு வரவும்.

அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸை தண்ணீரில் வேக வைத்து அந்த தண்ணீரை குடித்தால் அல்சர் குணமாகும்.

நண்பர்களே! இந்த பயனுள்ள பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *