Categories
Latest News

நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் விநியோகம்

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறி தேவையில்லாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 வாரம் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நமது தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் வழங்கும் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நாளை (மே 15) முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 விநியோகம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதி, நேரம் ஆகியவற்றின்படி முகக்கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் மே 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 22ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி நண்பகல் 12 மணிவரை ரேஷன் கடைகளில் நிவாரணம் வழங்கப்படும். இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருகிற ஜூன் 3ம் தேதி 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *