Categories
entertainment

நோயின்றி வாழ்வதற்கான ரகசியம்..!!

  • அதிகாலையில் எழுபவன்.
  • இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
  • முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.
  • மண்பானைச் சமையலை உண்பவன்.
  • உணவை நன்கு மென்று உண்பவன்.
  • உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.
  • வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.
  • கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.
  • மலச்சிக்கல் இல்லாதவன்.
  • கவலைப்படாத மனிதன்.
  • நாவடக்கம் உடையவன்.
  • படுத்தவுடன் தூங்குகிறவன்.
  • எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
  • தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.
  • கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
  • கற்பு நெறி தவறாது வாழ்பவன்.
  • மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.
  • ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.
  • வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.
  • இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.
  • தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.
  • உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.
  • வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.
  • 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *