Categories
Private Jobs

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு பருவகால வேலைவாய்ப்பு

உலகின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அடுத்த மாதத்தில் வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதன் இந்திய நிறுவனங்களில் சுமார் 110,000க்கும் மேற்பட்ட பருவகால வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Amazon

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களது வியாபாரங்களை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. மேலும் ஆன்லைன் விற்பனை இணையதளங்களான பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களும் பண்டிகை கால வியாபாரத்துக்கான போட்டியிட்டு கொண்டு பல்வேறு ஆபர்களை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம், பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான், பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்புகள் மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய வேலைவாய்ப்புகள், அமேசான் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்த 8,000 வேலை வாய்ப்புகளுக்கும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர வரும் 2025க்குள் நாடு முழுவதும் சுமார் 1 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக தான் இந்த பணியமர்த்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் ஆர்டர்களை பாதுகாப்பான, நம்பகமான மற்றும் விரைவான விநியோகத்திற்காக அமேசானை நம்பியுள்ளனர் என்று VP செயல்பாட்டாளர் அகில் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1,10,000க்கும் அதிகமான பணியாளர்கள் எங்கள் நிறைவு, விநியோகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களை வலுப்படுத்த உதவுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமேசானில் இந்த புதிய பணியமர்த்தல் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் நிதி சுதந்திரம் ஆகியவற்றை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், இராணுவ வீரர்கள் மற்றும் அடித்தட்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அமேசான் நிறுவனமானது 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதன் நிறைவு மற்றும் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தியது. அந்த வகையில் இந்நிறுவனம் இப்போது 15 மாநிலங்கள், 19 மாநிலங்களில் வரிசை மையங்கள், 1700 அமேசானுக்கு சொந்தமான விநியோக நிலையங்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பூர்த்தி மையங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *