பத்தாம் கிளாஸ் மாணவர்கள் எவ்ளோ மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான் – புதிய அறிவிப்பு

sslc-marks

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது தீவிரமடைந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எவ்வளவு மார்க் எடுத்திருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் நலன் காக்கும் வகையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இருப்பினும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.

மேலும் மதிப்பெண்கள் எப்படி நிர்ணயம் செய்யப்போகிறார்கள் என்ற எண்ணம் மாணவர்களிடேயும், பெற்றோர்களிடேயும் இருந்து வந்தது. இந்நிலையில் 10ம்வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர் என்றும் 50 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் சரி, பாஸ் பண்ண வைக்கப்படுவார்கள் என்று தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  இந்த தகவலை உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *