தினம் தினம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 4,28,525 ஆக உள்ளது. மேலும் உலகெங்கும் வாழும் மக்களின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக நிலைகுலைய செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும் கேப்டனுமான சாஹித் அப்ரிடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், என் உடல் மோசமாக வலித்தது.
நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார். இது அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீக்கிரம் அப்ரிடி அவர்கள், கொரோனா வைரஸை சிக்ஸர் அடித்து வெற்றி பெற்று முழு உடல் நலத்துடன் திரும்ப நாம் இறைவனை பிராத்திப்போமாக..
இந்த பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.