Categories
Latest News

பிரேக்கிங் நியூஸ்! அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மூடல் – தமிழக அரசு அதிரடி

கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவடைந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

breaking-news-2

இந்நிலையில் தமிழகத்தில் அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மூடப்படும் பள்ளிகளின் விவரங்களை தமிழக அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசிடம் அங்கீகாரம் பெறாமல் பல்வேறு தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. எனவே மாணவர்கள் கல்வித்திறன் அதிகமாக பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே இதுகுறித்து தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் கொரோனா நோயின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களில் தற்போது ஆன்லைன் வழிக்கல்வி மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது. இதை அடுத்து தமிழக அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக அரசின் அங்கீகாரம் இன்றி செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மாற்று பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக அங்கீகாரம் இல்லாமல் மூடப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *