பிரேக்கிங் நியூஸ் – அடுத்து நிலநடுக்கம் – மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

earthquake

இந்த வருடம் சும்மா விடாது போலிருக்கே ஆண்டவா…. ஆமாங்க.. அனுதினமும் பிரச்சனைகள் பல அணிவகுத்து நிற்கின்றன. கொரோனாவில் ஆரம்பித்து வெட்டுக்கிளி, ஆம்பன் புயல் என பாடாய் படுத்தி வந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் இந்தியாவின் ஜார்க்கண்ட் -கர்நாடகா மாநிலங்களில் வந்துள்ளது.

இது பற்றி கிடைத்த தகவலின்படி, ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான பூகம்பங்கள் தாக்கியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர்.

அதிகாலை 6:55 மணியளவில் ஜாம்ஷெட்பூரில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையத்தின் தரவை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹம்பி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவாகியுள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசான குலுங்கின. உடனடியாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்துவிட்டனர்.

மேலும் இந்த நிலநடுக்கம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த முக்கிய பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *