Categories
Latest News

பிரேக்கிங் நியூஸ்! இனி லைசன்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை

கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவடைந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அடுத்த ஊரடங்கு பற்றிய அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

breaking-news-2-1

மேலும் மத்திய அரசு இன்று ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பால் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *