
இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியானது உச்சம் சென்றுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்த லாக்டவுன் காலத்தில் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக திரு.அம்பானி அவர்களுக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பிரபல நிறுவனங்கள் வாங்கியது.

அதில் குறிப்பாக உலகின் முன்னணி நிறுவனமான பேஸ்புக், ஜியோவின் 9.99% பங்குகளை ஏற்கனவே வாங்கிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் தற்போது அமெரிக்காவின் பிரபல KKR நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீடு பண்ண ரெடியாகி விட்டது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்குகிறது. இது KKR நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப்பெரிய முதலீடு ஆகும்.
இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஐந்தாவது முதலீடு ஆகும். Facebook, SliverLake, Vista, General Atlantic, KKR போன்ற கம்பெனிகள் ஜியோவின் பங்குகளை வாங்கி உள்ளன.
இது தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய முதலீடாக கருதப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தொலைத்தொடர்பு துறையில் என்னனென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.