Categories
Latest News

பிரேக்கிங் நியூஸ்! தடுப்பூசி போடும் பணிகள் ஜூன் 3 முதல் 6 வரை தற்காலிக நிறுத்தம்!

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 2021 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மளிகைக் கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதத்தில் தீவிரமடைந்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று மே 1-ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள இந்நேரத்தில் தற்போது, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தவர், “ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வருகிறது. இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது.

கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது. எனவே தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசி டோஸ்களை ஆட்சியாளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *