Categories
Covid News Latest News Lock down news

பிரேக்கிங் நியூஸ்! தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று !

தற்போதைய சூழலில் படிப்படியாக கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் ஜூன் 28 வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

breaking-news-2-1

2019-ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் மேலும் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என்று கூறப்படுகிறது. டெல்டா பிளஸ் அல்லது AY.1 என்றழைக்கப்படும் இந்த வகை உருமாறிய வைரஸ், எளிதாக பரவக்கூடியது, நுரையீரல் அணுக்களுடன் எளிதாக தாக்கக்கூடியது, தொற்று பாதித்தவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு எதிராக செயல்படுவது, வைரஸை அழிக்கக் கூடிய எதிர்ப்பணுக்களை மீறி செயல்படும் தன்மைகளைக் கொண்டது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துளளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்த செய்தியை கூறியுள்ளார். ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இன்னும் 6 முதல் 8 வாரங்களில் அதை எதிர்கொள்ள நேரிடும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா கூறியிருந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் பரவல் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

எங்கள் வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *