பிரேக்கிங் நியூஸ் – நாளை முதல் 30-ந்தேதி வரை பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடைகள் அடைப்பு

chennai-lockdown

கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதில் தற்போது கிடைத்த தகவலின்படி, நாளை முதல் வரும் 30-ந்தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசுக்கு மருத்துவக் குழு  பரிந்துறை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து சென்னை வணிக சங்க நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவிக்கையில், நம் சென்னையில் நாளை முதல் 30-ந்தேதி வரை பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடைகளை அடைக்க வணிக சங்க நிர்வாகிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சென்னை, வட சென்னை மற்றும் தென் சென்னை வணிக சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும் எனவும், மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த உபயோகமான தகவலை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *