Categories
Exam Results

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இணையதளங்களில் இன்று முதல் பதிவிறக்கம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

entrance-exam

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை கடந்த 19ஆம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.

மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்களது மதிப்பெண் குறித்த விவரங்களை தெரிந்து கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது வெளியிடப்பட்ட தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் எனவே விருப்பமுள்ள மாணவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *