Categories
Latest News

மக்கள் எதிர்பார்ப்பு ! இன்று முதல் வீதிகளில் காய்கறிகள் விற்பனை

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உளளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மட்டும் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2,770 வாகனங்கள் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இந்த பணிகள் அனைத்தும் செய்யப்படும் எனவும் காய்கறிகள், பழங்கள் அனைத்தும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் வீதிகளில் நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த காய்கறிகளின் எண்ணிக்கை 18 ஆயிரம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சியில் மட்டும் 4,380 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயனுள்ள செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *