Categories
Latest News

மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.6000 நிதியுதவி

தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 8 ஆவது தவணை நிதியை பிரதமர் மோடி இன்று (மே 14) காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார்.

breaking-news-1

இந்திய விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் கிசான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் படி பிரதமர் கிசான் திட்டம், இந்தியாவிலுள்ள தகுதி வாய்ந்த விவசாயிகளை தேர்தெடுத்து, அவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1.15 லட்சம் கோடி நிதி உதவி, இந்திய விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், தற்போது 8 ஆம் தவணை விவசாய நிதியை பிரதமர் மோடி இன்று (மே 14) விடுவித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு விவசாயிக்கு மொத்தம் 6000 ரூபாய் என ஓராண்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமரின் இந்த நிதி திட்டம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்வை டெல்லியில் இருந்தபடியே, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். மத்திய வேளாண் அமைச்சர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில், பிரதமர் மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பிறகு 8 ஆவது தவணையாக, 19,000 கோடி ரூபாய், 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *