மிக முக்கியம் – வீட்டை விட்டு வெளியே வரும் போது இதையெல்லாம் மறந்துறாதிங்க

tn-lockdown

தமிழக அரசின் உத்தரவுப்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது என்றும் மற்ற மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு இயக்கப்பட உள்ளன. மேலும் கொரோனா நோயின் தாக்கம் காரணமாகவும், பொது இடங்களில்  சில கோட்பாடுகளை நம் அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. எனவே வீட்டை விட்டு வெளியே வரும் போது எல்லாரும் பின்வரும் விஷயங்களை தெரிந்து கொண்டு வெளியே வாங்க.

காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி கிடையாது.

பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் சரியான மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

வேலை செய்யும் இடங்களில் ஆரோக்கிய சேது செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.

பாஸ்கள் இல்லாமல் ஆட்களை அழைத்து செல்லும்போது, குடியிருப்பு நலச்சங்கங்கள், கட்டுமான சங்கங்கள் போன்றவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அரசின் விதிமுறைகளின்படி பின்பற்ற வேண்டும்.

நகர பஸ்களில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்களை வழங்க வேண்டும்.

பாஸ் வழங்கும் இடங்களில் கியூஆர் கோர்ட் (QR Code) முறையை பயன்படுத்தி டிக்கெட், பாஸ்களை வழங்கலாம். இந்த வசதிகள் இல்லாத பயணிகளுக்கு மட்டும் டிக்கெட்களை வழங்க வேண்டும்.

பயணிகள் பின்பக்க வாசல் மூலம் ஏறவும், முன்பக்க வாசல் மூலம் இறங்கவும் வேண்டும்.

பஸ் ஓட்டுனர், நடத்துனரின் உடல்வெப்பத்தை தினமும் சோதிக்க வேண்டும். முககவசம், கையுறையையும் கண்டிப்பாக அணிய வேண்டும்

பயணிகள் வசதிக்காக சானிடைசர் வைக்கப்பட வேண்டும்.

ஏ.சி யை பஸ்களில் இயக்கக் கூடாது.

பஸ் புறப்படும் முன்பும், வந்து சேர்ந்த பின்பும் சுத்தமாக கைகள் கழுவப்பட வேண்டும்.

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அது வாய் மற்றும் மூக்கை மூடியிருக்க வேண்டும்.

ஏறும் பஸ்சில் இருக்கைகள் இல்லாவிட்டால், பயணிகள் அடுத்த பஸ்சுக்கு வெய்ட் பண்ண வேண்டும்.

நண்பர்களே இந்த பயனுள்ள பதிவுகளை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *