Categories
Latest News

முக்கிய அறிவிப்பு! TNPSC தேர்வுகள் ஒத்திவைப்பு !

கொரோனா பரவலை குறைப்பதில் நம் தமிழக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கு முடிவடைந்த நிலையில், புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி சில தளர்வுகளுடன் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அடுத்த ஊரடங்கு பற்றிய அறிவிப்புகள் இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் TNPSC என்றழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பினை பதிவாளர்களுக்காக வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் தொற்று கட்டுப்படாததால் பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் பின்னர் மே 31 ஆம் தேதி வரையிலும் அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் பலனாக தொற்று குறைந்து வருவதினால் இதனை வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சார்பாக அந்த ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிப்பதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு கடந்த 05.06.2021 அன்று தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *