Categories
Latest News

முக்கிய தகவல்! தமிழக அரசு உத்தரவின் பேரில் வாகன வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

இந்தியா முழுவதும் தினம் தினம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல மட்டும் காலை 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசானது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக தற்போது தமிழக அரசு போக்குவரத்து வாகன வரியினை செலுத்தும் கால அவகாசத்தினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிது வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் மே 24 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பிறவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.

கடந்த மே 9 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தமிழக அரசால் போக்குவரத்து வாகனங்களுக்கான ஜூன் 30, 2021 ஆம் காலாண்டு வரியினை செலுத்தும் கடைசி தேதியாக மே 15 ஆகும். ஆனால் தற்போது அது மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் வரும் மே 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 15,00,000 வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தற்போதைய மோசமான சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *