Categories
Govt Jobs

முக்கிய நினைவூட்டல்! சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஹாய் பிரெண்ட்ஸ்! இது மிக முக்கிய அறிவிப்பு.. கண்டிப்பா எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. சென்னையில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

eb

மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து 10 நாட்களாக கடந்த மாதத்தில் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளின் விவரங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மின்பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.

தொடர்ந்து சென்னையில் ஒரு சில பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாகவும், இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மாலை 5 மணிக்குள் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் பகுதியின் எம்.எம்.டி.ஏ காலனி, வரலட்சுமி நகர், கங்கா நகர், கிருஷ்ணா நகர், தனலட்சுமி நகர், ராஜீவ்காந்தி நகர், கணபதி நகர், அய்யப்பன் நகர், பாலமுருகன் நகர், ராஜராஜன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம் ரோடு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *