Categories
Latest News

முதல்வரின் கண்ணை கவரும் புதிய திட்டங்கள் – இலவசப் பயண சலுகை முதல் ரூ.250 கோடியில் மருத்துவமனை வரை

கொரோனா வைரசின் சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 2021 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மளிகைக் கடைகள் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை நம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கண்ணை கவரும் புதிய திட்டங்கள்:

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும். தமிழ் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் விருது வழங்கப்படும்.
தென்சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
திருவாரூரில் 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவுடன், ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் ஏற்படுத்தப்படும்.
மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.70 கோடியில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும்.
ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும்.

இந்த திட்டங்கள் அனைத்தும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொண்டபின் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய செய்தியை கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் : நீங்களும் இணைய இங்கே 👉 https://chat.whatsapp.com/Iq52e5jN9in56yC30ZwMmj கிளிக் பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *