Categories
Latest News

முதல்வர் அதிரடி உத்தரவு – தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்நிலையில் 2 வாரம் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நமது தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு உள்ள தேதி, நேரம் ஆகியவற்றின்படி முகக்கவசம் அணிந்து வந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய ரேஷன் கார்டு குடும்ப அட்டைதாரர்களான 2,14,950 பேருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கான தொகை ரூ.2000 மே மாதமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 42 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பலர் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது..

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *