Categories
Latest Job News

யாரெல்லாம் TNPSC எக்ஸாம் எழுதுனீங்க ! 14 தேர்வு முடிவுகள் ஜூன் 8இல் வெளியீடு

2020 டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2020ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளின் முடிவுகளும், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அப்பட்டியலில் 14 தேர்வுகளை தவிர மற்ற அனைத்து துறை தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

கொரோனா பெரும் தொற்று காரணத்தால் தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும்.

மேலும், இத்தேர்வுகள் எழுத விழையும் தேர்வர்களின் நலனை
கருத்தில் கொண்டு மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்க கடைசி
நாள் 15.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/DMTG6NDF1w8JdYsk18Z2oA

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *