Categories
Latest News

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்க புதிய திட்டம்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிர தாக்கம் வேகமாக பரவி வருகிறது. சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே அமலில் உள்ளன. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அரசானது அதற்கான முதல் தவணையாக ரூ.2000 நிவாரண தொகையை வழங்க உள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் 13 வகை மளிகை பொருட்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 2.11 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, உப்பு, பருப்பு, கோதுமை, ரவை உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள் அன்று மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி மக்களை பாதிப்பாக்கி வருகிறது. மாநில அரசு அதிரடியாக தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகிறது. தினமும் அதிகரிக்கும் உயிரிழப்புகள் மக்களிடையே கலக்கத்தை வரவைத்துள்ளது.

எனவே அவர்களின் அறிவுறுத்தலின் படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். மேலும் மக்களுக்கு ஊரடங்கை சமாளிக்கும் பொருட்டு உதவித் தொகையாக ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000 வழங்கப்படும் எனவும் அதன் முதல் தவணை ரூ.2000 இம்மாதமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளும் தொடங்கி விட்டது.

மேலும் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எங்கள் வேலைவாய்ப்பு வாட்சப் குரூப் :
நீங்களும் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க 👉 https://chat.whatsapp.com/LabGlQl4NHiCyxLBkfikCX

இந்த நியூஸை உங்களிடமே வைத்திருக்காமல், கீழே உள்ள வாட்சப் பட்டனை கிளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கு வாட்சப் மூலமாக ஷேர் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *